திரெளபதி அம்மன் கோயில் விழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையம் அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 1ம் தேதி முதல் துவங்கி பீமன் வேடம் அணியும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.மங்கலம் சுற்று பகுதிகளான பெத்தார் தேவன்கோட்டை, கீழக்கோட்டை, ஆவரேந்தல், சப்பாணியேந்தல், சிலுகவயல், இரட்டையூரணி,புல்லமடை, ஆதி முத்தன் குடியிருப்பு, செட்டியமடை, செங்கமடை, கொத்திடல் களக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் கடைசி நாள் நிகழ்வாக நேற்று முன்தினம் ஆர்.எஸ்.மங்கலம் மக்களின் மண்டகப்படி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பீமன் வேடமணிந்து நகர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் ஆர்.எஸ்.மங்கலம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: