அதிமுக அலுவலகத்தில் இருந்து பத்திரங்களை திருடியதாக நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்ள தயார்: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

பெரியகுளம்: அதிமுக அலுவலகத்தில் பத்திரங்களை திருடி சென்றதாக நிரூபித்தால் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறி உள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, நேற்று முன்தினம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றும் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓபிஎஸ்சை, கோவை மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் கோவை செல்வராஜ் அளித்த பேட்டி:

ஒரு வாரத்திற்குள் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து, அவரது தலைமையில் கட்சி வழி நடத்திச் செல்லப்படும். கட்சியில் சண்டைக்கும்,  குழப்பத்திற்கும் காரணம் ஜோக்கர் ஜெயக்குமார் தான். அவர் போன்றவர்கள் இனி  கட்சியில் தலை தூக்க முடியாது. கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ்  ஆதரவாளர்கள் பத்திரங்களை திருடிச்சென்றதாக எடப்பாடி கூறுகிறார். லாக்கரிலோ,  பீரோவிலோ இருந்த பத்திரங்களை காணவில்லை என்று கூறுவது அபத்தம். அதனை  ஓபிஎஸ் தரப்பினர் திருடினார்கள் என்று நிரூபித்தால், நான் தற்கொலை செய்து  கொள்ள தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: