முடிச்சூர் ஊராட்சியில்‘நம்ம ஊரு சூப்பர்’சுகாதார பிரசாரம்

தாம்பரம்: தமிழக முழுவதும் ஊரக வளர்ச்சி துறை சார்பில், கிராமப்புறங்களில் தீவிர சுகாதார பணிகளை செய்ய ‘நம்ம ஊரு சூப்பர்’என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கியது. அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் மூலம் கிராமப்புறங்களில் சுகாதார பணிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு கட்டிடங்கள், ஊராட்சி பகுதிகளில் தீவிர தூய்மை பணிகள் செய்து, பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முடிச்சூர் ஊராட்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற ‘நம்ம ஊரு சூப்பர்’பிரசார தொடக்க நிகழ்ச்சியில், முடிச்சூர் ஊராட்சி அரசு நடுநிலை பள்ளியில் ஊராட்சி செயலர் வாசுதேவன் தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பள்ளியை தூய்மைப்படுத்தினர்.

Related Stories: