‘காதுகளை பாத்துக்குங்க’அஜித் அட்வைஸ்

சென்னை: மக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அஜித் கூறுகையில், ‘காதுகளில்  ஒரு வித சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால்,  காதுகள் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, மக்கள் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பிரச்னை அதிக சத்தங்களை கேட்டுக் கொண்டிருப்பதாலும்,  தலையில் அடிபடுவதாலும், மருத்துவ பின் விளைவுகளாலும் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக காதுகளில் சத்தம் கேட்டால், அதை உடனடியாக கவனிக்கவும் என  அஜித் அக்கறையுடன் கூறியுள்ளார்.

Related Stories: