ஆங்கிலேய ஆதிக்கம் தகர்த்த ஒண்டி வீரனின் புகழை போற்றுவோம்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த ஒண்டி வீரனின் புகழை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது: வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251வது நினைவுநாள். 2011ல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி. ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: