×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் கார்சியா

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ன் & சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிகாவின்  ஜெசிகா பெகுலாவுடன் (8வது ரேங்க்) மோதிய கார்சியா (35வது ரேங்க்) 6-1, 7-5 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடங்களில்  முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் அரினா சபலென்கா (7வது ரேங்க், பெலாரஸ்) 6-4, 7-6 (7-1) என நேர் செட்களில் சீனாவின்  ஹூவாய் ஸாங்கை (44வது ரேங்க்) வீழ்த்தினார்.

பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதியில் கார்சியா - சபலென்கா, மேடிசன் கீஸ் - குவித்தோவா மோதுகின்றனர். மெத்வதேவ் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர்  டானில் மெத்வதேவ் (ரஷ்யா) 2-0 என நேர் செட்களில்  டெய்லர் ஃபிரிட்சையும் (அமெரிக்கா),  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) 2-1 என்ற செட்களில் ஜான் ஐஸ்னரையுடம் (அமெரிக்கா) வென்று அரையிறுதிக்குள் நுழைந்தனர். கேமரான் நோரி (இங்கிலாந்து), போர்னா கோரிச் (குரேஷியா) ஆகியோரும் அரையிறுதியில் விளையாட  தகுதி பெற்றனர். அரையிறுதியில்  மெத்வதேவ் - சிட்சிபாஸ்,  நோரி - போர்னா மோதுகின்றனர்.


Tags : Cincinnati Open Tennis ,Garcia , Cincinnati Open Tennis; Garcia advanced to the semi-finals
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்