×

லக்னோவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் பதிவால் மக்கள் பீதி

லக்னோ: லக்னோவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். நகரம் முழுவதும் ஒரே நிலநடுக்க பீதியாக இருந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் ஆங்காங்கே கீழே விழுந்ததால், என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் இதுவரை உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.  

இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘இன்று அதிகாலை 1.12 மணியளவில்  லக்னோனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 82 கி.மீ.  நகரின் வடக்கு - வடகிழக்கு பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான பாதிப்பு விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Lucknow , Earthquake in Lucknow early this morning: 5.2 magnitude, people panic
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி