குன்னூர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

குன்னூர்:  குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையில் இயற்கையை ரசித்தபடி தேயிலை தோட்டங்கள் மத்தியில் மேக மூட்டங்களை ரசித்தபடி  புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில் நேற்று குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Related Stories: