×

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் யாரும் குளிக்க கூடாது: தீயணைப்புத்துறையினர் அட்வைஸ்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் தீயணைப்புதுறை நிலைய அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செயல் விளக்க நிகழ்ச்சியில் குளத்தில் குளிக்கும் போது ஆபத்தில் மாட்டி கொண்டவர்களை எப்படி மீட்பது என்று தீயணைப்புத்துறையினர் செய்து காட்டினர். மேலும் குளத்தில் நீர் நிறைந்திருப்பதால் யாரும் குளிக்கவோ, துணி துவைக்க வேண்டாம் பொது மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். மேலும் குளத்தில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்க வேண்டாம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டையும் குளத்தின் அருகே வைத்துள்ளனர்.

Tags : Thiruvilliputhur Andal Temple ,Tirumukkulam , No one should bathe in Thiruvilliputhur Andal Temple Tirumukkulam: Fire department advise
× RELATED வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா