×

அயனாவரம் பகுதியில் முருகன், வள்ளி, தெய்வானை சிலை திருடிய 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை அயனாவரம் பணந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் சுப செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை கனக சபாபதி என்பவர் நிர்வாகித்து வருகிறார். இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி கோயிலில் இருந்த முருகன் உற்சவர் சிலை, வள்ளி தெய்வானை உள்ளிட்ட சிலைகள் மற்றும் சிறிய உண்டியல் திருடு போனது. இதுகுறித்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து ஓட்டேரி குக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர்தான் கோயிலில் திருடியதை ஒப்பு கொண்டார். திருடிய சுவாமி சிலைகளை அயனாவரம் திக்கா குளம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவரிடம் கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து சந்தோஷை நேற்று கைது செய்து, வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ், சந்தோஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags : Murugan ,Valli ,Deivana ,Ayanavaram , 2 arrested for stealing idols of Murugan, Valli and Deivana in Ayanavaram area
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்