இலங்கையில் அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மீது போலீஸ் தடியடி...

கொழும்பு : இலங்கையில் அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். பொருளாதார வீழ்ச்சியில் மக்கள் போராட்டம் வெடித்ததால் இலங்கையில் அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. ரணில் விக்ரம சிங்கே அதிபராக பொறுப்பேற்றதும் அரசுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். போராட்டத்தை ஒருங்கிணைத்த 100கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அதிபர் ரணில் பிறப்பித்த அவசர நிலை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மேள  தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் அதிபர் ரணில் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் உடனே பதவி விலக வேண்டும் என்று விமர்சனம் செய்யதவாறு அதிபர் மாளிகையை நோக்கி முன்னேறிய மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சாலைகளில் சிதறி ஓடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கையின் எதிர் காட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களின் எதிர்ப்பை அடக்கி ஜனநாயகத்தை படுகுழியில் தள்ள ரணில் அரசு முயற்சிப்பதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ரணில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் வேண்டுமென்றே போராட்டங்களை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினர்.   

Related Stories: