×

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை...

டெல்லி : மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மின் கட்டமைப்பை நிர்வகிக்கும் ஒன்றிய அரசின் பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 13 மாநிலங்கள் 5,100 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளன. மின்சார சட்டத்திருத்தத்தின் புதிய விதிகளின்படி மாநிலங்கள் உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், காலக்கெடு முடிந்துவிட்டதால், வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலைக்கு மாநிலங்கள் உள்ளாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 926 கோடி ரூபாய் பாக்கியுள்ளது. நேற்று முதல் ஒன்றிய அரசின் தடை அமலுக்கு வந்திருப்பதால் 10 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வெளியில் வாங்க முடியாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரம் முதற்கட்டமாக 228 கோடி ரூபாய் தொகையை நாளை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மீதி தொகையை தவணை முறையில் செலுத்த உள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளது. மின்சார திருத்த சட்டம் அமலுக்கு வரும்முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். 


Tags : Power, production, tariff, to states, electricity, prohibition
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச்...