ஆரணி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் வழங்கிய காடை பிரையில் புழுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட காடை பிரையில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  

ஓட்டல் உரிமையாளர், அவை புழுக்கள் இல்லை. முட்டையை ப்ரை செய்யும்போது, அதன் கொழுப்பு சில நேரங்களில் திரிதிரியாக மாறி புழுக்களை போல் தெரியும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த வாலிபர்கள், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அதன்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று, உணவு மாதிரிகளை சேகரித்து சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: