கெட்ட வார்த்தைகள் லைகர் படத்துக்கு 7 ‘கட்’

ஐதராபாத்: கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றதால் லைகர் படத்துக்கு 7 இடத்தில் கட் தரப்பட்டது. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லைகர். புரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். கரண் ஜோஹர், நடிகை சார்மி தயாரித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வரும் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் சென்னைக்கும் வந்திருந்தனர். பாக்ஸர் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தை சமீபத்தில் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பியிருந்தனர்.

படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகிய கேரக்டர்கள் ஆங்காங்கே கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அந்த வார்த்தைகளை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அத்துடன் சில வன்முறை காட்சிகளையும் சென்சார் அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இதுபோல் படத்தில் 7 இடங்களில் காட்சி, வசனங்களை நீக்கியுள்ளனர். இதுபற்றி படத்தின் இயக்குனர் புரி ஜெகன்னாத் கூறும்போது, ‘படத்தில் 7 இடங்களில் தரப்பட்டுள்ள கட், சிறியவைதான். இதனால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. படத்தின் முக்கியமான கதைக்கு இந்த காட்சிகளால் எந்த பாதிப்பும் இல்லை. அதனால் காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்தோம்’என்றார்.

Related Stories: