திருமணம் செய்யும் எண்ணமில்லை; எஸ்.ஜே.சூர்யா தகவல்

சென்னை: திருமணம் செய்யப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை என எஸ்.ஜே.சூர்யா மறுத்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு 56 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்யவில்லை. தற்போது நடிகராக பல படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் தீவிரமாக பெண் தேடுவதாகவும் தகவல் பரவியது. இணையதளத்தில் இந்த செய்தி தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. விரைவில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் என தகவல் பரவியதால் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்ப தொடங்கிவிட்டனர்.

இதுபற்றி எஸ்.ஜே.சூர்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அவரது தரப்பில் கூறும்போது, ‘சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, இப்போது அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மனைவி, குடும்பம் என இன்னொரு பொறுப்புகளை ஏற்க இப்போதைக்கு அவர் தயாராக இல்லை. அதனால் திருமணம் செய்யும் முடிவிலும் இல்லை. சினிமாவில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: