ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு இலவச பயிற்சி: தாட்கோ தகவல்

சென்னை: தாட் கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடின பட்டதாரிகளுக்கு வங்கி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கி தேர்வுகளில் ஒன்றான IBPS CRP PO/MT CRP-XII 2022ம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு www.ibps.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. IBPS CRP PO/MT CRP-XII 2022 தேர்வானது 11 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மொத்தம் 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 20 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியின பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.  வருகிற 22ம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வங்கி தேர்வில் பணியமர வேண்டுமென வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.

Related Stories: