×

கடன் தொல்லையால் கழுத்தை அறுத்துக்கொண்டு குடும்பத்துடன் கிணற்றில் குதித்த வியாபாரி; மனைவி, 2 குழந்தை பலி: உயிர் தப்பியவருக்கு தீவிர சிகிச்சை; அலங்காநல்லூர் அருகே பரபரப்பு

மதுரை: கடன் தொல்லையால் கழுத்தை அறுத்துக்கொண்ட வியாபாரி, மனைவி, மகள், மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் கிணற்றில் மூழ்கி மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். வியாபாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுரை அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (39). கொய்யாப்பழ மொத்த வியாபாரி. மனைவி சுரேகா (36). மகள் யோகிதா(16) தனியார் பள்ளி விடுதியில் தங்கி, 12ம் வகுப்பும், மகன் மோகனன்(11) பாலமேடு பள்ளியில் 6ம் வகுப்பும் படித்து வந்தனர். முருகன் கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார்.

வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினர். இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை முடிவெடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை விடுதிக்கு சென்று, மகள் யோகிதாவை அழைத்து வந்தார். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என கூறிவிட்டு, கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட அவர், தவசி புதூர் அருகே விவசாய கிணற்றில் மனைவி, மகன், மகளோடு குதித்துள்ளார். முன்னதாக அருண் என்ற உறவினருக்கு செல்போனில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்யப் போகிறோம்.

எங்களை மீட்டு அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்ததாக கூறப்படுகிறது.  இதுபற்றி அவரது உறவினரான சென்னை போலீஸ்காரர் ரமேஷிடம் அருண் தெரிவித்துள்ளார். தகவலறிந்து அலங்காநல்லூர் போலீசார் அப்பகுதி கிணறுகளில் தேடியபோது, குத்தகை தோட்ட கிணற்றில் நால்வரும் கிடப்பதை கண்டறிந்து மீட்டனர். இதில் மனைவி, மகன், மகள் இறந்து விட, முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Bustle ,Alankanallur , A businessman who cut his neck due to debt and jumped into a well with his family; Spouse, 2 children killed: Survivor in intensive care; Bustle near Alankanallur
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்