காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்தியாவின் 76வது பவளவிழா சுதந்திர தினத்தை முன்னிட்டு,  செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியோர் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தன. இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு தனியார் மண்டபத்தில் நடந்தது.

பயனாளிகளுக்கு கண்புரை, கண்பார்வை கோளாறு, கண்ணில் அடிக்கடி நீர் வடிவது மற்றும் கண்வலி உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கண் மருத்துவர்களை கொண்டு முறையாக பரிசோதனை செய்யப்பட்டது.   அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். இந்நிகழ்சியில், செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: