கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது.  

இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வழக்கை தீவிரப்படுத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், தங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை என பள்ளி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: