×

'தமிழ்க்கடல்'நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்: தலைவர்கள் இரங்கல்..!

நெல்லை: தமிழறிஞர் நெல்லை கண்ணன் (77) உடல்நலக் குறைவால் காலமானார். சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் தமிழ்க்கடல் என அழைக்கப்பட்டார். 1970-ம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் நெல்லை கண்ணனின் தமிழ் ஒழித்து வந்தது. 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவருடனும் நட்புறவில் இருந்தவர்.

தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதை அண்மையில் பெற்றிருந்தார் நெல்லை கண்ணன். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். காங்கிரஸ் கட்சியின் நீண்ட காலம் பணியாற்றியவர் நெல்லை கண்ணன். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து இரங்கல்
பாற்கடல் போல் தமிழில் பொங்குபவர் தமிழ்க்கடக் நெல்லை கண்ணன். சமகாலத்தின் தமிழ்க்கடல் வற்றிவிட்டது என்றே கருதுகிறேன். சமகால சமூகத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டிக் கொண்டே இருந்தவர் நெல்லை கண்ணன். நெல்லை கண்ணன், குடும்பத்தார் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா
நெல்லை கண்ணனின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு; இனிமேல் இத்தகைய மனிதரைக் காண்பது அரிதானது இவ்வாறு சாலமன் பாப்பையா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனியரசு
பிரபல தமிழ் எழுத்தாளர், தமிழ் இலக்கிய பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், அரசியல்வாதியுமான தமிழ் கடல் ஜயா நெல்லை கண்ணன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அய்யாவின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது. பிரபல தமிழ் எழுத்தாளர், தமிழ் இலக்கிய பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், அரசியல்வாதியுமான  தமிழ் கடல் ஜயா நெல்லை கண்ணன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அய்யாவின் இழப்பு தமிழ் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று என கொங்கு இளைஞர் பேரவை தனியரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
நெல்லை கண்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழுக்கும் மாபெரும் இழப்பு; நெல்லை கண்ணனின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் பலநாள் நிலைத்திருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.




Tags : Nella Kannan , 'Tamilkadal' Nellai Kannan passed away due to ill health: Leaders mourn..!
× RELATED தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான...