அதிமுக அலுவலக சாவி விவகாரம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: டெல்லி: அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உட்சபட்ச மோதல் எழுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார்.

மேலும் அங்கு நடந்த வன்முறையில் பொதுமக்கள் வாகனங்கள் உள்பட பல அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து சட்டம் -ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது; அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்ற ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார். அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில், இடைக்கால தடை விதிக்க முடியாது. விரிவான விசாரணை மேற்கொள்ளாமல், எந்த இடைக்கால உத்தரவையும், பிறப்பிக்க முடியாது̣. வழக்கை ஒரு வாரத்துக்கு பிறகு விசாரிப்பதாகவும், எதிர்மனுதாரர்கள் மற்றும் சீல் வைத்த வருவாய்த் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

Related Stories: