×

ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், சிறுமியின் தாய், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் வெளி மாநிலங்களிலும் கருமுட்டை விற்பனை செய்தது அம்பலமானது. இந்த விவகாரத்தில் ஈரோடு, சேலம், ஓசூர் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டர்களுக்கு முதல் கட்டமாக சீல் வைக்கப்பட்டது.

அதேபோல் சுதா தனியார் மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 4 பேர் மீதும் ஏற்கனவே போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Gunter ,Erode , In Erode egg case, 4 people were charged with goon law: District Collector's order
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...