×

சின்சினாட்டி ஓபன் முதல் சுற்றிலேயே வெளியேறிய வில்லியம்ஸ் சகோதரிகள்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்  போட்டியில் முன்னணி வீராங்கனைகளான வீனஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில்  வெஸ்ட்ர்ன் அண்டு சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் போட்டி என்பதால் உலகின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் எல்லோரும் இப்போட்டியில்  விளையாடுகின்றனர்.

இந்திய நேரப்படி முதல் சுற்று ஆட்டங்கள்  நேற்று முடிந்தன. அதன் முதல் சுற்று ஒன்றில் களமிறங்கிய  அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்( 42வயது, 1500வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (30வயது, 17வது ரேங்க்) உடன் மோதினார். அதில் பிளிஸ்கோவா ஒரு மணி 40 நிமிடங்களில் 7-5, 6-1 என நேர் செட்களில்  வீனசை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

அதேபோல் வீனஸ் சகோதரி செரீனா வில்லியம்ஸ்(40வயது, 402வது  ரேங்க்) , பிரிட்டன் வீராங்கனை எம்மா ரெடுகானு(19வயது, 13வது ரேங்க்) உடன் விளையாடினார். அதில் எம்மா ஒரு மணி 5 நிமிடங்களில் 6-4, 6-0 என நேர் செட்களில் எளிதில் வீழத்தினார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரிய  செரீனா அடுத்த வாரம் தொடங்க உள்ள யுஎஸ் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரும், அவரது சகோதரி வீனசும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர். அதேபோல் நட்சத்திர வீராங்கனைகள்  நவோமி ஒசாகா(ஜப்பான்), கோரி காப்(அமெரிக்கா),  பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து), ஹடாட் மியா(பிரசேில்) ஆகியோர் முதல் சுற்றிலும்,  மரியா சக்காரி(கிரீஸ்), அனெட் கொண்டவியட்(எஸ்டோனியா) ஆகியோர் 2வது சுற்றிலும்  தோற்று வெளியேறினர்.

Tags : Williams ,Cincinnati Open , Cincinnati Open, Williams Sisters,
× RELATED சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும்...