காங்கிரஸ் முன்னாள் ராணுவ வீரர் துறை தலைவர் நியமனம்: கட்சி தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவ வீரர் துறை தலைவராக ஜி.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவ வீரர் துறையின் தலைவராக சுபேதார் ஜி.ராஜசேகரனை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது. இவருடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories: