×

தொடர் விடுமுறையையொட்டி சிரமம் இன்றி பயணிக்க கூடுதல் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் பாராட்டு

காரைக்குடி: சுதந்திரதின விடுமுறையையொட்டி மக்கள் சிரமம் இன்றி பயணிக்க போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு மேலாண்மை இயக்குநர் அறிவுரையின்படி கூடுதல் பஸ் இயக்கப்பட்டது. 12, 13, 14 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நன்னிலம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஊர்களுக்கும் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக திருச்சியில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக திருச்சி சென்னை வழித்தடத்தில் 150 பஸ்கள், தஞ்சை சென்னை வழித்தடத்தில் 25, திருச்சி கோவை வழித்தடத்தில் 40, திருச்சி கோவை வழித்தடத்தில் 40 பஸ்கள் இயக்கப்பட்டன. தவிர நாகை சென்னை வழித்தடத்தில் 50 பஸ், கும்பகோணம் சென்னை வழித்தடத்தில் 50, காரைக்குடி சென்னை வழித்தடத்தில் 25, ராமநாதபுரம் சென்னை வழித்தடத்தில் 25, புதுக்கோட்டை சென்னை வழித்தடத்தில் 30 பஸ் என 435 கூடுதல் பஸ் இயக்கப்பட்டுள்ளது. தவிர நேற்று இதே வழித்தடங்களில் கூடுதலாக 250 பஸ்களை பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் இயக்கப்பட்டுள்ளது.



Tags : Transport Corporation , Running of extra buses for hassle-free travel during the holiday season: Passengers praise the Transport Corporation
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்