காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பச்சையப்பன் பள்ளி, ஆற்காடு நாராயணன் சாமி பள்ளி மற்றும் கா.மு.சுப்பராயன் ஆகிய மேனிலைப்பள்ளியில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியேற்றி  மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், பள்ளியில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலிகளையும் வழங்கினார். 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விலையில்லா சைக்கிள்களை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார். முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆறுமுகம், மாநகராட்சி உறுப்பினர்கள் சூர்யா சோபன் குமார், கமலக்கண்ணன், திமுக நிர்வாகிகள் திலகர், வரதராஜன், மாமல்லன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: