×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக 76வது சுதந்திர தின பெருவிழா, அங்குள்ள வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி லிங்கநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வர் வி.முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட தியாகி வரதராஜன் கலந்துகொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், குடிமைப் பணி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது மருத்துவ கல்லூரியின் அனைத்து துறை தலைவர்களுக்கும், பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்லூரி அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Melmaruvathur ,Adiparashakti Medical College , A freedom fighter martyr hoisted the flag at Melmaruvathur Adiparashakti Medical College
× RELATED சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்