மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் 76வது சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் வீரம்மாள் மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தலை தவிர்த்து மஞ்சப்பையினை படுத்திடவேண்டும். கிராமங்களில் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரினை அகற்றி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மருத்துவான்பாடி கிராமத்தில் பழுதான சாலைகளை அகற்றிவிட்டு இருபுறமும் கால்வாயுடன் கூடிய தரமான சாலை அமைத்திட வேண்டும். கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படுத்துவதற்காக பொது இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு திடல் அமைத்திட வேண்டும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்திட வேண்டும். மழைநீரில் வெளியேறும் கால்வாய்கள் முறையாக சீரமைத்து சாலையில் செல்லும் வகையில் புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும் உள்பட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: