புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை; 3 பேர் கைது

புழல்: புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளம்(45). இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுவிட்டு வந்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரனை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதேபோல் லட்சுமிபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பெருமாள்(48) இவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூத்துக்குடி சென்றிருந்த நிலையில், மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனடிப்படையில், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(40), ஸ்டீபன் (30), குழந்தைவேல் (34) ஆகிய மூவரும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், மணிகன்டன், குழந்தைவேலு ஆட்டோ டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து, 45 சவரன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: