×

பெரியபாளையத்தில் போதை விழிப்புணர்வு பேரணி; மாணவர்கள் பங்கேற்பு

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான  விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் மாதா கோயில் தெருவில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை  வலியுறுத்தும் வகையிலும், போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணியும்  நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் அருட் தந்தை டி.அருள்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜூதா அன்பரசி முன்னிலை வகித்தார். பெரியபாளையம் மின்வாரிய கட்டிடம் அருகே இருந்து துவங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. அப்போது, போதைப் பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷமிட்டவாரும் ஊர்வலமாக பள்ளிக்கு வந்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து கலந்து கொண்டார். இதன் பின்னர் சிறப்புரையாற்றினார். பள்ளி வளாகத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சுதந்திரதின பவள விழாவை நினைவு கூறும் வகையிலும், போதை பழக்கத்தால் வாழ்க்கை சிதைந்து விடும் என்பதையும் விளக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி மாணவர் சங்க நிர்வாகிகள் நியமிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் அனைவரையும், பள்ளி மாணவர் சங்கத் தலைவர் 10ம் வகுப்பைச் சேர்ந்த ரோஷன் நன்றி கூறினார். இறுதியில், பள்ளி மாணவர் சங்கத் துணைத் தலைவர் 9ம் வகுப்பு மாணவி ஓவியா நன்றி கூறினார்.

Tags : Periyapalayam , Drug awareness rally in Periyapalayam; Student participation
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை...