×

காட்பாடி அருகே சேவூரில் மின்கம்பி அறுந்து சென்னை- கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் நின்றது

வேலூர்: காட்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை- கோவை இன்டர் சிட்டி ரயில் பாதி வழியில் நின்றது. சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்தபோது, உயர் மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து ரயில் மேல் விழுந்தது.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரயில் பாதி வழியில் நின்றது. இதையடுத்து, அவ்வழியாக வந்த திருவனந்தபுரம், லால்பாக், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவலறிந்து காட்பாடியில் இருந்து 15 பேர் கொண்ட மின் பொறியாளர் குழுவினர் விரைந்து வந்து உயர் மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் பணிகள் முடிவடைந்து. பின்னர், மாலை 6.15 மணியளவில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை புறப்பட்டு சென்றது. இதையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் புறப்பட்டு சென்றது.


Tags : Chennai-Coimbatore ,Inter City Express ,Saveur ,Gadpadi , Inter-city express train cuts power line
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...