×

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் மாவட்டம் முழுவதும் சுதந்திரதின விழா உற்சாக கொண்டாட்டம்

*ரூ.1.55 கோடி நலத்திட்ட உதவிகள்

*போராட்ட தியாகிகள் கவுரவிப்பு

சிவகங்கை :  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது. கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் 90பேருக்கு சான்றிதழ்களும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய துறை சார்ந்த அலுவலர்கள் 457 பேருக்கும் கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 55லட்சத்து 72ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்பி செந்தில்குமார், சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, துணை இயக்குநர் ராம்கணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், ஆர்டிஓக்கள் சுகிதா, பிரபாகரன், தனித்துணை ஆட்சியர் காமாட்சி, சிவகங்கை டிஎஸ்பி பால்பாண்டி, தாசில்தார் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அரசு சார்பில் அரசு அலுவலர்கள் கவுரவித்தனர். சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் துரைஆனந்த் கொடியேற்றினார். ஆணையாளர் பாஸ்கரன், நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ செந்தில்நாதன் கொடியேற்றினார்.

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிச் செயலர் சேகர் கொடியேற்றினார். தலைமையாசிரியர் முத்துக்குமார், மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சிவகங்கை அருகே சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் சேவியர் கொடியேற்றினார். தலைமையாசிரியர் முத்துக்கண்ணன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை கேஆர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் பொக்கிஷம் கொடியேற்றினார். நாட்டரசன்கோட்டை கேஎம்எஸ்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் கொடியேற்றினார். பள்ளிச்செயலர் நாகராஜன், தலைமையாசிரியை மகாலெட்சுமி, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
நாட்டரசன்கோட்டை 8வது வார்டில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினிகவிராஜ் கொடியேற்றினார். செயல்அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறண் தேசியக் கொடியை ஏற்றினார். செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிவகங்கை தாயல் இல்லத்தில் தவழும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் கொடியேற்றினார். திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் சேங்கைமாறன் கொடியேற்றினார். துணைத்தலைவர் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை கவியோகி சுத்தானந்தபாரதி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தவமணி கொடியேற்றினார். கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா கொடியேற்றனார். நீதிபதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Independence Day , Sivagangai: The Independence Day celebration was held in Sivagangai collector office. Independence Day held at the collector office ground
× RELATED இந்தியாவின் ‘ட்ரோன் சகோதரிகள்’...