வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...

ராஜஸ்தான்: ராஜஸ்தான், ஒடிசா மற்றும் காஸ்மீரில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடலில் உருவாகியுள்ள மற்றோரு காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு தொடர் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தேவி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அங்கு மணல் மூட்டைகள் வைத்து வெள்ள நீர் கசிவு அடைக்கப்பட்டது. குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கலாகந்தி மாவட்ட வழியே ஓடும் ஹத்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜூனாகத் என்ற ஊரில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நீடிக்கும் கனமழையால் பண்டி நகரில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் உள்ள உஜ் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலை மற்றும் குன்றுகளை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதில் பல இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று பத்தரமாக மீட்டனர்.  

Related Stories: