×

காய்கறி சூப்

செய்முறை:

கேரட்டை தோல் சீவி சதுரங்களாக நறுக்கவும். முட்டைக்கோஸை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை நான்காக வெட்டவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பு, நறுக்கிய காய்கறிகளான கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சின்னவெங்காயம் மற்றும் பச்சைப்பட்டாணி ஆகியவற்றை குக்கரில் போட்டு கலவை மூழ்குமளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, இரண்டு நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும். காய்கறி கலவையை வடிகட்டி தண்ணீரை தனியே வைக்கவும். காய்கறி கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டிய கலவைத் தண்ணீருடன் அரைத்த காய்கறி விழுதைச் சேர்த்து, அதனுடன் சீரகப் பொடியைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பறிமாறும் பொழுது உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழையினை தூவவும்.

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்