இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...

டெல்லி: 3ஆம் தரப்பிலிருந்து தலையீடு அதிகபடியாக இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா  நடவடிக்கை எடுத்துள்ளது. ஃபிபா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 3ஆம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக சஸ்பேண்ட் செய்வது என ஃபிபா கவுன்சில் ஒரு மித்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளது. இந்த தலையீடானது ஃபிபா அமைப்பின் விதிகளை மீறிய செயல் என கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற அக்டோபர் 11 தேதி முதல் 30 தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை போட்டியில் திட்டமிட்ட படி இந்தியாவில் நடத்தப்பட இயலாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் தோன்றுமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஃபிபா மதிப்பீடு செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு எட்டப்படலாம் என்று நம்புவதாகவும்   அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஃபிபா சஸ்பேண்ட் நடவடிக்கை காரணமாக சர்வதேச போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க இயலாது. மேலும் உள்ளூர் போட்டிகளுக்கு ஃபிபா அங்கீகாரம் கிடைக்காது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பீர்பால் பட்டேல் தமது பதவி காலத்திற்கு பிறகும் பணியில் நீடித்ததே பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சைனையில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வாகம்  செய்ய கடந்த மே மாதம் குழு ஒன்றை அமைத்தது. 

Related Stories: