×

கொரோனா பாதிப்புக்கும் மத்தியில் பல கோடி சம்பளத்துடன் ஐஐடி மாணவர்களுக்கு வேலை; ஆன்லைன் நேர்முக தேர்வில் அசத்தல்: ஆண்டுதோறும் அதிகரிக்கும் வாய்ப்பு

சென்னை: கொரோனா பாதிப்புக்கும் மத்தியில் கடந்த 2021-2022ம் ஆண்டில், ஆன்லைனில் நடந்த நேர்முகத் தேர்வில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு பல கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் நடப்பு 2021-22ம் ஆண்டில் தொழில்கள் கடுமையான பாதிக்கப்பட்டது. எனினும், ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்புகளில் ஐஐடி மாணவர்கள் கோடிகளில்  சம்பளத்தை பெற்றுள்ளனர். இதில், ஆன்லைன் தேர்வில் ஐஐடி மும்பை மற்றும் ரூர்க்கி அதிகபட்சமாக ரூ.1.8 கோடி  சம்பளமாக மாணவர்கள் பெற்றனர். இதில், வேலை வாய்ப்பில் ஐஐடி-மும்பை   தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேபோல் ஐஐடி-ரூர்க்கி முதல் நாளில் மிகப்பெரிய சர்வதேச சலுகையைப் பெற்றது. அதாவது  ரூ.2.15 கோடி (2,87,550) தொகுப்பை பெற்றுள்ளது. முதலிடத்தில் உள்ள  ஐஐடி-மெட்ராஸின் சர்வதேச தொகுப்பு ரூ.1.9 ஆக உயர்ந்தது. இது  2020-21ல் ஆண்டில் ரூ.45 லட்சத்தில் இருந்து ஒரு புதிய உச்சத்தை பதிவு  செய்துள்ளது. இதன் உள்நாட்டு தொகுப்பு ரூ.1.3 கோடி ஆகும். இதேபோல் ஐஐடி  மெட்ராஸ் அதிகபட்சமாக 231 வேலை வாய்ப்புகளை தனது மாணவர்களுக்கு பெற்று  கொடுத்து ஐஐடிகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் கூறுகையில், ‘வேலை  வாய்ப்பு பருவத்தின் முடிவில், ஐஐடி-பி எப்போதும் இல்லாத அதிகபட்ச  எண்ணிக்கையை எட்டியுள்ளது. அதாவது 1,431 மாணவர்கள் வேலைவாய்ப்பு  பெற்றுள்ளனர்.  இது கடந்த ஆண்டு 1,150 ஆக இருந்தது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த மாணவர்களே அதிகம் வேலைவாய்ப்பு பெற்றனர். மென்பொருள் துறையில் முன்னேற்றம் அதிகமாக உள்ளது. சிறந்த  தொழில்நுட்ப நிறுவனங்கள், எப்போதும்  இல்லாத அளவுக்கு இன்டர்ன்ஷிப்களின் எடுத்ததன் விளைவாக பிபிஓக்களின் சாதனை எண்ணிக்கை  மற்றும் அதிக வேலைகள் கிடைத்தது.

மேலும் ெதாழில் சார்ந்த  எம்டெக் ஆய்வறிக்கைத் திட்டம், பல புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற பல  முக்கிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதுவும் அதிக ஊதியத்தில் மாணவர்களுக்கு  வேலை கிடைக்க வழிவகை
செய்தது என்றனர்.

Tags : corona crisis , Jobs for IIT students with multi-crore salary amid corona crisis; Awkwardness in Online Interview: Chances Increasing Yearly
× RELATED கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய...