சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.! எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை

சென்னை: கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை சென்னை, சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். திமுக வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர். கவர்னரின் தேநீர் விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருட கலந்துகொண்டுள்ளார். கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: