×

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியது எஸ்.பி.ஐ: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

டெல்லி: பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. எம்.சி.எல்.ஆர். எனப்படும் வங்கிக்கடன் வட்டி விகிதத்தை 3 மாதக் கடனுக்கு 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. 6 மாத கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து 7.65 சதவீதமாக பாரத ஸ்டேட் வங்கி அதிகரித்துள்ளது. ஓராண்டு கால கடனுக்கான வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும், 2 ஆண்டு கடனுக்கு 7.9 சதவீதமாகவும், 3 ஆண்டு கடனுக்கு வட்டி விகிதம் 7.8 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி இருந்தது. வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இ.எம்.ஐ அதிகரிக்கும். இதேபோல், எஸ்.பி.ஐ, கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 2.90 முதல் 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.ஐ.யின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : SBI , Short Term Loan, Interest Rate, SBI
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...