அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி

மதுரை: அதிமுகவினர் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவது ஐயமே. எங்களுக்கே தேசியக்கொடி கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். பின்னர் சிலை வளாகப்பகுதி சுற்றிலும், தேசிய கொடியை கட்டி வைத்தார்.

 பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. வீடுகளில், சாதாரண குடிமகனும் தேசியக்கொடி ஏற்றலாம். நாட்டு மக்கள் அனைவரும் தேசிய உணர்வுடனும், தேசப்பற்றுடனும் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும். அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் தேசியக்கொடி ஏற்ற முடியுமா என்பது ஐயமே. எங்களுக்கே  தேசியக்கொடி கிடைக்கவில்லை.

 திருப்பூரில் 25 ஆயிரம் கொடிகளுக்கு ஆர்டர்  கொடுத்த நிலையில் வெறும் 5 ஆயிரம் கொடிகள் மட்டுமே வந்தது. அனைத்து  வீடுகளுக்கும் தேசியக்கொடி இலவசமாக கிடைக்க பிரதமர் ஆணை பிறப்பித்திருக்க  வேண்டும். பெரியவர்கள், மாணவர்கள் மட்டுமே போதைக்கு அடிமையாக இருந்த நிலையில், தற்போது மாணவிகளும் போதையில் சுற்றும் நிலை உள்ளது. போதைப்பொருளை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. எவராலும் அசைக்க முடியாது. அதிமுக எழுச்சியை தடுக்க முடியாது’’ என்றார்.

Related Stories: