பஸ் கட்டணம் உயர்த்தப்படாது: போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி

கிருஷ்ணகிரி: டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

கிருஷ்ணகிரியில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:

ஒன்றிய அரசு அடிக்கடி டீசல் விலையை உயர்த்துவதால், பஸ்களை நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு பதிலாக இழப்பை ஈடுகட்டும் விதமாக, பஸ்களில் காய்கறிகள் ஏற்றி செல்லவும், பஸ்களில் இருபுறங்களிலும் விளம்பர பலகை வைத்து, வருவாய் ஈட்டவும் மற்றும் பிற வகைகளில் ஏற்படுகின்ற செலவினங்களை குறைத்து போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக 2 ஆயிரத்து 35 பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Related Stories: