×

ஆசாரிபள்ளத்தில் கஞ்சா விற்பனை வாலிபர்கள் மற்றும் தாயாரின் 4 வங்கி கணக்குகள் முடக்கம்

நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக வாலிபர்கள், அவர்களது தாயார் என 4 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனையாளர்கள்  மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குமரியில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு: குமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் போலீசார் பெருவிளை சானல்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடசேரியை சேர்ந்த அஸ்வின் எட்வர்ட் மகன் காட்வின் எட்வர்ட்(25), பெருவிளையை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் சந்திரகுமார்(19), மேலபெருவிளை சானல்கரையை சேர்ந்த ஜெனி வில்பிரட் மகன் செல்வகுமார்(24) ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் காட்வின் எட்வர்ட், சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் காட்வின் எட்வர்ட், சந்திரகுமாரின் வங்கி கணக்குகள், மற்றும் அவர்களது தாயாரின் வங்கி கணக்குகளை முடக்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Acharipalam , Sale of ganja, teenagers, freezing of bank accounts
× RELATED செங்கல்பட்டு அருகே நள்ளிரவில்...