அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்

மதுரை: அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்ற நடந்ததே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயகுமார், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மதுரையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வதுதான் மரபு. வீர மரணமடைந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் வெளியே வரும்போது விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. பண்புமிக்க, கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடைபெற்றதில்லை.

துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வால் மனம் வேதனைப்பட்டதாக டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மதுரையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது. டாக்டர் சரவணன் தனது வேதனையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: