நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி

பாட்னா: பீகாரில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜ.வை கழற்றி விட்டு,  லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆர்ஜேடி. தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி உள்ளார்.

இந்நிலையில், இந்த கூட்டணி அரசில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறும் போது, ‘’ 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நாளை பதவியேற்று கொள்வார்கள். நிதிஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது மேலும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: