மைக் டைசன் என் முகத்தில் குத்திவிட்டார்; விஜய் தேவரகொண்டா

சென்னை: புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்த‘லைகர்’என்ற பான் இந்தியா படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் சம்பந்தமாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா கூறியதாவது:‘நோட்டா’பட ஷூட்டிங்கில் தமிழ் பேச கற்றுக்கொண் டேன்.

தற்போது இன்னும் தீவிரமாக கற்று வருகிறேன்.‘லைகர்’படத்தில் பேச்சுக்குறைபாடு கொண்ட குத்துச்சண்டை வீரனாக நடிக்கிறேன். பேச்சுக்குறைபாடு இருப்பவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை தரும். தமிழில் லோகேஷ் கனகராஜ், வெற்றி மாறன், பா.ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். இதுவரை நான் நடித்த சில தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

விரைவில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பேன். விரைவில் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன். சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் நடித்த நாட்களை எப்போதும் மறக்க முடியாது. அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். ஒருமுறை ஷூட்டிங்கில் அவர் தவறுதலாக என் முகத்தில் குத்திவிட்டார். அந்த நாள் முழுவதும் அதிக வலி காரணமாக கஷ்டப்பட்டேன். அவர் என்னிடம் ‘ஸாரி’கேட்டார். அந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.

Related Stories: