இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக்; ஆக.27ல் தொடக்கம்

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சைக்கிள் பந்தயத்துக்கான‘சைக்ளிங் லீக்’போட்டி  தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. கால்பந்துக்கு ஐஎஸ்எல், கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போன்று ஒவ்வொரு விளையாட்டுக்கும் உள்ளூர் லீக் போட்டிகள் வணிக நோக்கில் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் டிஎன்பிஎல் போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, சைக்கிள் பந்தயத்துக்கான லீக் போட்டி இந்திய அளவில் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சைக்ளிங் லீக் (டிசிஎல்) என்ற பெயரில் நடைபெறும் இப்போட்டியில் நம்ம சென்னை ரெய்டர், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், ரான்சிசர்ஸ் ராணிப்பேட்டை, திருச்சி ராக்ஃபோர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ்,  கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் என 8 அணிகளின் சார்பில் 150 வீரர்கள் பங்கேற்கின்றனர். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் அரங்கில் யு14,  யு18 ஆகிய பிரிவுகளில் சிறுவர், சிறுமிகளுக்கும்,   பொதுப் பிரிவில் ஆடவர், மகளிருக்கும் தனித்தனியே போட்டிகள் (ஆக.27, 28 ) நடத்தப்பட உள்ளன.

2வது சுற்று கோவையில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சம், 2வது பரிசாக ரூ. 2 லட்சம், 3வது பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படும். இது குறித்து முன்னாள் வீரர் எம்.சுதாகர் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள திறமையைான சைக்கிள் பந்தய வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம்’என்றார்.

Related Stories: