இலங்கையில் இருந்து 4 பேர் மண்டபம் வருகை

ராமநாதபுரம் இலங்கையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தமிழகத்திற்கு ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர். இலங்கை திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம் மனைவி ஜெயமாலினி (50), இவரது மகன்கள் பதுர்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள் பதுஷிகா (19) ஆகியோர், நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் கடற்கரையிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு, நேற்று அதிகாலை தனுஷ்கோடி வந்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் வந்த 4 பேரும் மண்டபம் மரைன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக சென்றனர். இவர்கள் கடந்த 2006 முதல் 2019 வரை மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்கியிருந்தனர். கடந்த 2019, அக்.10ம் தேதி விமானம் மூலம் இலங்கை சென்றனர். மரைன் போலீசார் விசாரணையில், அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலை உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி  தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். விசாரணைக்கு பிறகு 4 பேரும் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories: