×

கோயில்களின் சொத்துகளை அறநிலையத்துறையின் சொத்துகளாக கருத கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் சொத்து தொடர்பாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தொடர்ந்திருந்தார்.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத் துறை சட்டப்படி, கோயில் சொத்துகளை கோயில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதியில்லை. கோயில் சொத்துகளை குத்தகைக்கு வழங்க ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அது சம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபனைகளை கேட்க வேண்டும் என்று சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோயில் சொத்துகளை அறநிலையத் துறை சொத்துகளாக கருதக் கூடாது. அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ விட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : ICourt , Assets of temples should not be treated as assets of charity department: ICourt orders
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு