வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கிங்ஸ்டனில் நடக்கும் இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசி வெற்றிப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் 2வது ஆட்டம் நேற்று முடிந்தது. அதில் டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட நியூசி 20ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 185ரன் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47(33பந்து, 4பவுண்டரி, 2சிக்சர்), டெவன் கான்வே 43(29பந்து, 4பவுண்டரி, 2சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் 33(15பந்து, 3பவுண்டரி, 2சிக்சர்) ரன் விளாசினர். வெ.இண்டீஸ் வீரர் ஒடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய வெ.இண்டீஸ் 20ஓவருக்கு 7 விக்கெட்களை இழந்து 172ரன் மட்டுமே எடுத்தது. அதனால் நியூசி 13ரன் வித்தியாசத்தில் பெற்றிப் பெற்றது. வெ.இண்டீஸ் வீரர்களில் ஷம்ரா புரூக்ஸ் 42(43பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்), கடைசிவரை களத்தில் இருந்த ரொமாரியோ ஷெப்பார்டு 31*(16பந்து, 1பவுண்டரி, 3சிக்சர்), ஒடியன் ஸ்மித் 27*(12பந்து, 4பவுண்டரி, 1சிக்சர்) ரன் வெளுத்தனர். நியூசி தரப்பில்  மிட்செல் சான்ட்னர் 3விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசி 2-0 என்ற கணக்கில் முன்னிலையை உறுதி செய்ததுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெறும்.

Related Stories: