மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி என்ற ராணுவ முகாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தக்குதலில் வீரமரணமடைந்தார். அவருடைய உடல் இன்று விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் உயர் அதிகாரிகள் பலர்வந்திருந்தினர். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாஜக தொண்டர்கள் பலர் அங்கு குவிந்திருந்தனர்.

இந்நிலையில், ராணுவவீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது, அங்கு குவிந்திருந்த பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் திடீரென அவரது காரை மறித்து அவர் காலனியை தூக்கி வீசி அடாவடியில் ஈடுபட்டனர். உடனடியாக நிதியமைச்சரின் வாகனத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட இருந்த தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குகளை பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: