×

கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என அதிர்ச்சி தகவல்...

நியூயார்க்: கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சிறுவயதிலிருந்தே இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகிறார். நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையில் ஏறிய ஒருவர் சல்மான் ருஷ்டியை சரமாரியாக குத்தினார். கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் 15 கத்தி குத்துகள் விழுந்ததால் மேடையிலேயே சல்மான் ருஷ்டி மயங்கி விழுந்தார். நிலைகுலைந்த ருஷ்டிக்கு நிகழ்ச்சி வந்திருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி அளித்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் நியூயார்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் கண்ணுக்கு செல்லவேண்டிய நரம்பு பாதிப்பு அடைந்துள்ளதால் ஒரு கண்ணில் அவர் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நியூஜெர்ச்சியை சேர்ந்த 24 வயதான ஹதிமட்டர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி 1981 எழுதிய மிட்நைட் சில்ட்ரன் புத்தகத்திற்காக உலகில் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர்ஸ் விருந்தினை பெற்றுள்ளார். சாத்தானின் வேதங்கள் புத்தக சர்ச்சையால் பல ஆண்டுகளாக தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வரும் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் என்று உலக முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.                          


Tags : Salman Rushdie , Knife, stab, writer, Salman Rushdie, eye, sight, shock
× RELATED மிதுன ராசியினரின் பொதுப் பண்புகள்